தமிழ்மொழி இலக்கண, இலக்கிய, வரலாற்று அடிப்படை கொண்ட மிகப் பழமையானதொரு மொழி. புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் மொழி கற்றுத் தருவதே தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ் கற்பிப்பது மட்டுமல்லாமல், இசை, நடனம், நாடகம், போன்ற தமிழர் பண்பாட்டை ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து தமிழையும், தமிழ் பண்பாட்டையும் போற்றுவது இக்கழகத்தின் விருப்பமாகும்.
மொழி என்பது வெறும் தொடர்புக்கான ஊடகம் மட்டுமன்று. அது ஒரு இனத்தின் வரலாற்று அடையாளம். கலாச்சாரத்தின் வெளிப்பாடு. சிந்தனையின் திறவுகோல். பல்வேறு இனங்கள் ஒன்றுகூடி வாழும் அயலகச் சூழலிலும் தம் மொழியினை, வேர்களை, அதன் தொன்மையை குழந்தைகள் அறிந்திருப்பது இன்றியமையாதது என்று எண்ணும் Buckinghamshire, United Kingdom பகுதியில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து தமிழ் மொழிப் பள்ளி அமைத்துக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறோம். அத்துடன் பல்வேறு பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தமிழில் ஆர்வம் கொண்ட அனைவரையும் கழகம் வரவேற்கிறது.
Tamil language is an ancient South Indian Language with a long history and rich literature and comprehensive grammar. The main objective of Bucks Tamil Kalvi Koodam is to teach Tamil language to the Diaspora Children and Youth. In addition to teaching Tamil, Institute encourages Cultural activities such as music, dance, drama and any art form based on Tamil language and Tamil culture to promote Tamil and Tamil culture.
Copyright © 2017 - All Rights Reserved - Bucks Tamil KalviKoodam.com
Developed By Abdul Hakeem & Javidha Begum