வணக்கம்
மொழி என்பது வெறும் தொடர்புக்கான ஊடகம் மட்டுமன்று. அது ஒரு இனத்தின் வரலாற்று அடையாளம். கலாச்சாரத்தின் வெளிப்பாடு. சிந்தனையின் திறவுகோல். பல்வேறு இனங்கள் ஒன்றுகூடி வாழும் அயலகச் சூழலிலும் தம் மொழியினை, வேர்களை, அதன் தொன்மையை குழந்தைகள் அறிந்திருப்பது இன்றியமையாதது என்று எண்ணும் ஹை வைகோம், பக்கிங்ஹாம்சைர் பகுதியில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழிப் பள்ளி அமைத்துக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறோம். அத்துடன் பல்வேறு பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
தமிழில் ஆர்வம் கொண்ட அனைவரையும் கழகம் வரவேற்கிறது.